பருப்பு உருண்டைக் குழம்பு
Also known as Spiced Lentil Dumplings, Village Paruppu Urundai Kuzhambu · Veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam
Good for: Tamil New Year
Cook along
13 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Paruppu urundai kuzhambu: toor and chana dal dumplings in a tamarind gravy with coconut and onion paste. Medium-spicy, serves 4, 45 min plus soaking, video.
Low calorie
Ingredients
23 itemsதுவரம் பருப்பு½ cup
தண்ணீர்3.5 cup
சோம்பு1 tsp
கறிவேப்பிலை25
உப்பு2 tsp
துருவிய தேங்காய்¼ cup
தண்ணீர்2 tbsp
கடுகு1 tsp
தாளிப்பு வடகம்½ tsp
சாம்பார் பொடி2 tbsp
கட்டிப் பெருங்காயம்½ inch
கடலைப் பருப்பு¼ cup
புளி4 tbsp
காய்ந்த மிளகாய்3
பூண்டு5 cloves
சின்ன வெங்காயம்20
கொத்தமல்லி1 tbsp
வெங்காயம்1
நல்லெண்ணெய்3 tbsp
வெந்தயம்¼ tsp
மஞ்சள் தூள்¼ tsp
மிளகாய்த் தூள்1 tsp
கொத்தமல்லி1 tsp
Contains: wheat, sesame.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 363kcal | 1452kcal |
| Protein | 12g | 47g |
| Carbohydrate | 46g | 186g |
| Fat | 16g | 65g |
| Fibre | 11g | 45g |
| Sugar | 12g | 46g |
Cookd masalas for toor dal
Method
- 1
துவரம் பருப்பு, கடலைப் பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும். தனியாக வைக்கவும்.
துவரம் பருப்புகடலைப் பருப்பு
- 2
புளியை 1 ½ கப் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறிய புளியைக் கரைத்துப் புளித் தண்ணீர் எடுக்கவும். தனியாக எடுத்து வைக்கவும்.
தண்ணீர்புளி
- 3
ஊற வைத்த துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், சோம்பு, பூண்டு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்.
சோம்புகாய்ந்த மிளகாய்பூண்டு
- 4
கொரகொரப்பாக அரைத்த கலவையை ஒரு பெரிய பாத்திரத்துக்கு மாற்றி, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
கறிவேப்பிலைஉப்புசின்ன வெங்காயம்கொத்தமல்லி
- 5
கலவையைச் சிறிய உருண்டைகளாக உருட்டி, எண்ணெய் தடவிய இட்லி தட்டில் வைத்து 15 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். ஆற தனியாக வைக்கவும்.
- 6
தேங்காயையும் வெங்காயத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
துருவிய தேங்காய்தண்ணீர்வெங்காயம்
- 7
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கடுகு, வெந்தயம், தாளிப்பு வடகம் சேர்த்து வெடிக்க விடவும்.
கடுகுதாளிப்பு வடகம்நல்லெண்ணெய்வெந்தயம்
- 8
சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
கறிவேப்பிலைசின்ன வெங்காயம்
- 9
அரைத்த தேங்காய் வெங்காய விழுதைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- 10
பெருங்காயம், மஞ்சள் தூள், சாம்பார் பொடி, மிளகாய்த் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
சாம்பார் பொடிகட்டிப் பெருங்காயம்மஞ்சள் தூள்மிளகாய்த் தூள்
- 11
எடுத்து வைத்த புளித் தண்ணீர், 1 டீஸ்பூன் உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலந்து கொதிக்க விடவும்.
தண்ணீர்உப்பு
- 12
குறைந்த தீயில், ஆவியில் வேக வைத்த பருப்பு உருண்டைகளைக் குழம்பில் சேர்த்து, உருண்டைகள் மேலே மிதந்து வரும் வரை வேக விடவும்.
- 13
கொத்தமல்லி சேர்த்து சூடான சாதத்துடன் பரிமாறவும்.
கொத்தமல்லி
Tips from other cooks
3 notes- A
Arul PadminiApril 2022
Recipe came out very well 🤝👍
- V
vinothiniNovember 2021
It came out very tasty 🙂
- R
Rajeshwari AravarasanNovember 2024
What is thalipu vadam?


